தவமிருந்து பெற்ற பெண் குழந்தையை கொலை செய்த இந்தியப்பெண்: பிரித்தானியாவில் துயர சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நீண்ட காலமாக குழந்தையில்லாமல் இருந்து, கடைசியாக செயற்கை கருவூட்டல் முறையில் பெற்ற குழந்தையை, பிரித்தானியாவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Shalina Padmanabha (33) என்னும் அந்தப் பெண், தனது ஏழு மாதக் குழந்தையை கடந்த மூன்று மாதங்களாக கொடுமைப்படுத்தி வந்துள்ளதும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Shalinaவும் அவரது கணவரும் பல ஆண்டுகளாக குழந்தையின்றி அவதியுற்றிருக்கின்றனர். பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் அந்த குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் Shalina.

அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததோடு, அதன் தலையில் ஒரு துவாரமும் இருந்ததால் பிறந்தவுடனேயே பல அறுவை சிகிச்சைகளுக்குட்பட வேண்டியிருந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரு நாள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தை உயிரிழந்திருகிறது.

குழந்தையை பரிசோதிக்கும்போது அதன் உடலில் பல காயங்கள் இருந்துள்ளன. அத்துடன் உடற்கூறு பரிசோதனையில், அதன் தலையில் பல காயங்களும், மணடை ஓட்டில் எலும்பு முறிவும், விலா எலும்புகள் முறிவும், கண்களுக்கு பின்னால் இரத்தக்கசிவும் இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தைநீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், ஒரு நாள் அது திடீரென உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக Shalinaவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கணவர் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.

விசாரணையின்போது தனது பெயர், தான் ஒரு இந்தியர் என்பது போன்ற விவரங்களை மட்டும் கூறிய Shalina, வேறெந்த கேள்விக்கும் பதிலளிக்காததோடு, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ஆனால் விசாரணையின் அடிப்படையில், குழந்தையின் மரணத்துக்கு Shalinaதான் காரணம் என முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் 19ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்