20 மில்லியன் பவுண்டுகளை இழந்த பிரித்தானிய கோடீஸ்வரர்... எதனால் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஓன்லைன் எஸ்டேட் ஏஜன்சியில் பணத்தை முதலீடு செய்த நிலையில் £20 மில்லியனை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை Sunday newspaper பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

கோடீஸ்வரரான ரிச்சர்ட் தெஸ்மாண்ட் Daily Express பத்திரிக்கையின் முன்னாள் உரிமையாளர் ஆவார்.

இவர் டிபிலோ என்ற ஓன்லைன் எஸ்டேட் ஏஜன்சியில் பல கோடிகள் முதலீடு செய்தார். இந்நிலையில் டிபிலோ நிறுவனம் இம்மோவ் என்ற நிறுவனத்துடன் இணைந்தது.

இதையடுத்து ரிச்சர்ட்டின் நார்தர் & ஷெல் பங்குகள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்தன. இதன் காரணமாக ரிச்சர்ட் £20 மில்லியன் பணத்தை இழந்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் ரிச்சர்டின் மொத்த சொத்து மதிப்பு £2.5 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்