பிரித்தானியாவில் ஆசியரை நம்பி ஏமாந்த திருமணமாகாத இளம்பெண்... வேதனையுடன் கூறிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஆசிய பெண்ணிடம் தனது தாய் இறந்துவிட்டதாகவும், தனக்கு லொட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்ததாகவும் பொய் கூறி ஆசியர் ஒருவர் பணத்தை ஏமாற்றியுள்ளார்.

பிரித்தானியாவின் பெர்மிங்காம் சிட்டி செண்டரில் கடந்த வாரம் பெண் ஒருவரிடம் வந்த நபர் தனது தாய்க்கு பாகிஸ்தானில் இதய ஆப்ரேஷன் செய்ய பணம் தேவைப்படுவதாக கூறினார்.

மேலும் தனக்கு லொட்டரியில் £123 மில்லியன் பரிசு விழுந்துள்ளதாகவும் அந்த பரிசு பணம் பின்னரே கிடைக்கும் எனவும் கூறினார்.

ஆப்ரேஷனுக்கு பணம் கொடுத்து உதவினால் பின்னர் கொடுத்துவிடுவேன் என கூறியதை நம்பிய அந்த பெண் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்.

பின்னர் தான் அந்த நபர் தன்னை ஏமாற்றியதை அப்பெண் உணர்ந்தார்.

இந்நிலையில் அதே போல சில தினங்களுக்கு முன்னர் ஆசிய பெண்ணான சஞ்சதா (30) என்பவரை அதே ஆசிய நபர் ஏமாற்றியுள்ளார்.

இது குறித்து சஞ்சிதா கூறுகையில், அந்த நபர் என்னிடம் வந்து இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

தாயின் இறுதிச்சடங்குக்கு பணம் வேண்டும் என கூறினார். மேலும் தனக்கு லொட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்ததாகவும் பணம் கைக்கு வர நாளாகும் என கூறினார்.

தன்னுடைய லொட்டரி சீட்டை அவர் காட்டியதோடு ஓட்டுனர் அடையாள அட்டையையும் காண்பித்து போட்டோ எடுத்து கொள்ளுமாறு கூறினார்.

பின்னர் நான் அவருக்கு £900 பணம் கொடுத்தேன். இதோடு தனியாக £120 கொடுத்தேன்.

அந்த நபர் பார்ப்பதற்கு மிகவும் நேர்மையானவராக தெரிந்தார். ஆனால் பின்னர் தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

எனக்கு பணம் திரும்பி கொடுப்பதாக அவர் சொன்ன இடத்துக்கு சென்ற போதே தான் உண்மையை உணர்ந்தேன்.

அந்த நபரின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்