3 மாத குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை: 21 வயது பிரித்தானிய தந்தை எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது மூன்று மாத குழந்தையை பார்க்க அனுமதி மறுத்ததை அடுத்து இளம் வயது தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஹரி ஸ்லாட்டர். இவரே தமது குழந்தையை பார்க்க அனுமதி மறுத்ததை அடுத்து நன்னடத்தை சோதனை அலுவலகம் அருகே தற்கொலை செய்துகொண்டவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரயிலில் சந்தித்த பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்து ஹரி ஸ்லாட்டர் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 21 வயதான ஹரியை அவரது குழந்தையை சந்திக்க நன்னடத்தை சோதனை அலுவலகம் தடை விதித்தது.

இதில் மனமுடைந்த ஹரி 2 மாதம் கடந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் பொலிசாரால் காப்பாற்றப்பட்டார்.

இதனையடுத்து மனநல சட்டத்தின் கீழில் கைதான ஹரி, மூன்று மன நல மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் மூவரும் ஹரியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த ஹரியின் தாயார், 16 வயதில் இருந்தே ஹரி 5 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும்,

தமக்கும் தமது கணவருக்கும் இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்