மேகன் வீட்டில் வேலை பார்க்க மறுக்கும் பணியாளர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசி மேகன் தன்னுடைய குழந்தை பிறந்து 6 வாரங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், அதற்குள் இரண்டு பெண்கள் வேலையை விட்டு நின்றுள்ளதால், மூன்றாவதாக ஒருவரை வேலைக்கு தேடி வருகிறார்.

அமெரிக்க நடிகையான மேகன் பிரித்தானிய இளவரசர் ஹரியை கடந்த 2018ன் ஆண்டு மே மாதம் திருமணம் செய்தது முதலே தன்னுடைய பணியாளர்கள் ஒவ்வொருவரையும் இழந்து வருகிறார்.

அவருடைய மெய்க்காப்பாளர், தனிப்பட்ட உதவியாளர் மற்றும் தனி செயலாளர் ஆகியோர் அடுத்தடுத்து தங்களுடைய வேலையை ராஜினாமா செய்து வெளியேறினார். மேகன் கடுமையாக நடந்துகொண்டதாலே அவர்கள் அனைவரும் வேலையை விட்டு நின்றதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் மேகனுக்கு ஆர்ச்சி பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், குட்டி இளவரசரை கவனிப்பதற்காக சேர்க்கப்பட்ட இரண்டு ஆயாக்கள் வேலையை விட்டு நின்றுள்ளனர். இரவு நேரங்களில் குழந்தை அடிக்கடி அழுதுகொண்டிருப்பதால் முதலில் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்தனர். அவர் நின்றதும் பிரித்தானியாவை பூர்விகமாக சேர்ந்த ஒருவரை வேலைக்கு சேர்த்தனர்.

அவர்கள் இருவரும் தற்போது வேலையை விட்டு நின்றிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் குழந்தையை ஆழ்ந்து கவனிக்க மூன்றாவதாக ஒரு பெண் பணியாளரை தேடி வருகின்றனர்.

முன்னதாக வெளியேறிய இரண்டு பெண்களும் தாமாக வேலையை விட்டு நின்றார்களா அல்லது நிறுத்தப்பட்டார்களா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்