முகம் சுளிக்க வைத்த ஆடையால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

முகம் சுளிக்க வைக்கும் ஆடையுடன் வந்த இங்கிலாந்து பெண்ணை, பணிப்பெண்கள் ஈஸிஜெட் விமானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஆஸ்போர்ன் (31) என்கிற ஒப்பனை கலைஞர் தன்னுடைய நண்பருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹாரியட், ஈஸிஜெட் விமானத்தின் பணிப்பெண்கள் தன்னை மற்ற பயணிகள் அனைவரின் முன் அவமதித்ததாக புகார் கூறியுள்ளார்.

விமானத்தில் நுழைய முயன்ற போது, அனைவரின் முன் வைத்து என்னுடைய ஆடை, குழந்தைகள் பார்க்கும் விதத்தில் இல்லை என்று கூறி வெளியேற்றிவிட்டனர். எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னுடைய தோழியுடன் ஸ்பெயின் விமான நிலைய தரையிலேயே படுத்துறங்கிவிட்டு, மறுநாள் 149 டொலர்கள் செலுத்தி தான் நாடு திரும்பினேன் எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ள விமான நிர்வாகம், பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எங்களுடைய பணிப்பெண்களுக்கு முழு பயிற்சி கொடுத்துள்ளோம். ஹாரியட் உள்ளாடை ஏதுமின்றி ஆபாசமாக வந்துள்ளார்.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் அது நன்றாக இருக்காது என்பதால், எங்களுடைய பணிப்பெண் அனுமதி மறுத்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்தும் அவர் பணியாளர்களை அவமதித்துள்ளார். அதனால் தான் விமானத்தில் இருந்து வெளியேற்றினோம் என விளக்கம் கொடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்