லண்டனில் செல்பியில் சிக்கிய பிக் பாக்கெட் பெண்: ஆனால் பொலிசில் சிக்கவில்லை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில், தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பையிலிருந்து மற்றொரு பெண் பிக்பாக்கெட் அடிக்கும் காட்சி, அவர் எடுத்த செல்பி வீடியோவிலேயே சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியரான தனது கணவருடன் லண்டனில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தாய்லாந்தைச் சேர்ந்த Nina Spencerஐக் காண்பதற்காக அவரது தோழி Toi பிரித்தானியாவுக்கு வந்திருந்த நிலையில் இருவரும் செல்பியில் வீடியோ எடுத்தவாறே சாலையில் நடந்து சென்றிருக்கிறார்கள்.

சாலையைக் கடந்து மறுபக்கம் வந்தபின் Nina தனது பர்சைத் தேடினால் அது அவரது பையில் இல்லை.

என்ன நடந்தது என புரியாமல் திகைத்த Ninaவுக்கு தான் எடுத்த வீடியோ நினைவில் வர, உடனடியாக அதை இயக்கிப் பார்த்திருக்கிறார்.

அந்த வீடியோவில் அவரை சுற்றி மூன்று பெண்கள் நடந்து வர, அவர்களில் ஒருவர் லாவகமாக தனது பர்சை திருடும் காட்சி பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் Nina.

உடனடியாக பொலிசாரிடம் சென்று Nina புகாரளிக்க, இந்த சம்பவம் எங்கு நடந்தது என அவர்கள் கேட்டிருக்கிறார்கள். பொலிசாரிடம் தன்னிடம் இருந்த வீடியோவைக் கொடுத்திருக்கிறார் Nina.

தங்கள் பணம் திரும்ப கிடைக்குமா என்பது தனக்கு தெரியாது என்றாலும், குறைந்தபட்சம் நகரில் என்ன நடக்கிறது என்பதை பொலிசார் அறிந்திருக்கட்டும் என்பதற்காகவே வீடியோவை பொலிசாரிடம் கொடுத்ததாக தெரிவிக்கிறார் Nina.

ஏற்கனவே லண்டனில் ஆண்கள் கத்திக் குத்து சம்பவங்களை நடத்திவரும் நிலையில், பெண்கள் திருட்டு வேலைகளில் இறங்கியுள்ள சம்பவம் கவலையை அளிப்பதாக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்