லண்டனில் மாயமான துபாய் இளவரசி: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

துபாய் ஆட்சியாளரில் 6-வது மனைவியும் ஜோர்டான் அரசரின் மகளுமான இளவரசி ஹயா லண்டனில் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் ஆட்சியாளரும் பெரும் செல்வந்தருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூம் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளவரசி ஹயா விவாகரத்து கோரியதாக கூறப்படுகிறது.

விவாகரத்து கோரிய நிலையில் அவர் ஜேர்மனியில் தஞ்சம் கோரியதாகவும், தமது பிள்ளைகள் இருவருடன் ஜேர்மனிக்கு தப்பியதாகவும், ஜேர்மன் தூதரக அதிகாரி ஒருவரே இதற்கு உதவியுள்ளார்.

மட்டுமின்றி, இளவரசி ஹயாவின் கணவரும் செல்வாக்கு மிகுந்தவருமான ரஷீத் மக்தூம் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் தொடர்பில் விடுத்த கோரிக்கையை ஜேர்மனி அரசு நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, இளவரசி ஹயா லண்டனில் வைத்து மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் லண்டனில் நடந்த ராயல் அஸ்காட் விழாவில் கணவருடன் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும்,

குதிரை பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட 45 வயதான இளவரசி ஹயா சமீப ஆண்டுகளாக கணவர் ரஷீத் மக்தூமுடன் ராயல் அஸ்காட் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்பவர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு துபாய் ஆட்சியாளர் ரஷீத் மக்தூமின் மகள் இளவரசி லதிஃபா, நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஆனால் துபாய் நிர்வாகத்தால் அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டு, அவர் மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கே திரும்பியதாகவும், அதன் பின்னர் அவரது தகவல் ஏதும் வெளிவரவில்லை.

இளவரசி ஹயாவை கடந்த 2004 ஆம் ஆண்டு ரஷீத் மக்தூம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இரு பிள்ளைகள் தற்போது துபாய் திரும்பினார்களா அல்லது, தாயார் ஹயாவுடன் லண்டனில் உள்ளார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தற்போது இளவரசி ஹயா லண்டனில் மாயமான தகவல் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்