ஒரே நேரத்தில் 6 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கிராய்டனில் 6 பெண்கள் மீது மர்ம நபரால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க லண்டன் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மாநகர பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர் கருப்பினத்தை சேர்ந்தவர் எனவும், சுமார் 16 முதல் 25 வயது நபர் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிராய்டனில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலேயே கடந்த மே 3 ஆம் திகதி முதல் ஜூன் 21 ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

30 வயது முதல் 60 வயதுவரையான பெண்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 6 பெண்களில் ஐவர் நாயுடன் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், 6 பெண்கள் மீதான தாக்குதலும் பட்டப்பகலில் நடந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, இதில் நான்கு பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் நடந்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இதுவரை அந்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்யவில்லை என்றே தெரியவந்துள்ளது.

மேலும், அந்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுகவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மட்டுமின்றி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் நடந்ததாக கண்டறியப்பட்டுள்ள பூங்காவில் பொலிஸ் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers