பிரித்தானிய அரசியலில் குழப்பம் நிலவும் சூழலில் மீண்டும் காதலியுடன் போரிஸ்...

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் பதவிக்கு அடுத்து யார் என குடுமி பிடி சண்டை நடக்காத குறையாக ஆளாளுக்கு அடித்துக் கொள்ள, காதலியுடனான சண்டையால் வீட்டை விட்டு வெளியேறினார் போரிஸ் ஜான்சன்.

அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சனின் காதலியின் வீட்டில் நடந்த களேபரம், பொலிசார் குவியும் அளவுக்கு மோசமானது.

இதனால் போரிஸ் ஜான்சன் காதலியின் வீட்டை விட்டு வெளியேற, பயந்து போன அவரது காதலியும் வீட்டை விட்டு தலைமறைவானார்.

போரிஸ் ஜான்சன் காதலி வீட்டில் என்ன நடந்தது என்பதை அவர் வெளிப்படையாகக் கூற வேண்டும் என்னும் குரல் வலுக்க, அவர் பிரதமர் ஆவதற்கு அது ஒரு பின்னடைவாக கருதப்பட்டது.

எதிர்ப்பாளர்கள் போரிஸ் ஜான்சனை மோசமாக வர்ணிக்கும் பதாகைகளுடன் அவரது காதலி வீட்டின் முன் குவிய, அவரோ, அவரது காதலியோ வீட்டுக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் சஸ்ஸெக்சில் உள்ள ஒரு தோட்டங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில், போரிஸ் ஜான்சனும் அவரது காதலியும் காதல் பொங்க கைகளைக் கோர்த்தபடி அமர்ந்து புன்னகையுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அவர்களது நண்பர் ஒருவர், உண்மை என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள், சரியான நேரம் வந்ததும் திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்கிறார்.

இதற்கிடையில் போரிஸ் ஜான்சனைக் குறித்து பொலிசில் புகாரளித்த தம்பதியரைக் குறித்து, அவர்கள் அடுத்த வீடுகளுக்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்க்கும் ஜெரமி கார்பினின் ஆதரவாளர்கள் என்று Jacob Rees-Mogg விமர்சித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers