மொபைல் போனை பார்த்தபடியே சாலையில் இறங்கிய பெண் மீது மோதியவருக்கு அபராதம்: மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனில் தனது மொபைல் போனை பார்த்தபடியே சாலையில் இறங்கிய ஒரு இளம்பெண் மீது சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் மோதிவிட்டார்.

Gemma Brushett என்ற அந்த இளம்பெண் தன் மீது மோதிய Richard Hazeldean மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுமார் நான்காண்டுகளாக நடந்து வந்த அந்த வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Gemmaவுக்கு Richard இழப்பீடாக 4,161.79 பவுண்டுகள் வழங்க வேண்டும் என்றும், கிட்டத்தட்ட 100,000 பவுண்டுகள் வழக்குச் செலவை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பைக் கேட்ட Richard அதிர்ந்து போனார். அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்து போனது என தலையில் கையை வைத்து அமர்ந்துவிட, எதிர்பாராத உதவி வந்தது.

வழக்கு குறித்து அறிந்த பொதுமக்களுக்கு Richard மீது இரக்கம் ஏற்பட, சிலர் அவருக்கு உதவுவதற்காக நன்கொடை வசூலித்துள்ளனர்.

அதில் இதுவரை 47,000 பவுண்டுகள் சேர்ந்துள்ள நிலையில், மக்களுடைய உதவி கண்டு நெகிழ்ந்துபோன Richard, தான் நீதிமன்றத்திற்கு செலுத்தியதுபோக மீதி வரும் பணத்தை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வளவு பணத்துக்கு தான் எங்கே போவேன் என்பது தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த நேரத்தில் தனக்கு உதவிய மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் Richard.

மொபைல் போனை பார்த்துக் கொண்டே சாலையில் இறங்கிய Gemma மீதும் தவறு உள்ளது என்றாலும், சைக்கிள் ஓட்டுபவர்கள் எதற்கும் தயாராக வரவேண்டும் என்று கூறி, சரியான சிக்னல் பார்த்து, ஹாரனும் அடித்தபடி சைக்கிள் ஓட்டி வந்த Richardக்கு நீதிபதி அபராதம் விதித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers