பிரித்தானியா முன்னாள் துணை பிரதமருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் முன்னாள் துணை பிரதமர் ஜான் பிரிஸ்காட் பக்கவாதத்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான பிரிஸ்காட், பிரித்தானியாவின் துணைப் பிரதமராக 1997 முதல் 2007 வரை திகழ்ந்தார். 81 வயதான பிரிஸ்காட் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹல் ராயல் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவாக செயல்பட்ட ஹல் ரயல் மருத்துவமனை செவிலியர்கள், பக்கவாத பிரிவினர், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்.

நாங்கள் அவர்களுக்கு போதுமான நன்றி சொல்ல முடியாது. அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் முழுமையாக மீண்டு வருவார் என ஜான் பிரிஸ்காட் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers