பிரித்தானியாவின் அடுத்த பிரதமர்? டிவி நிகழ்ச்சியில் போரிஸ் ஜான்சனை விளாசிய ஜெர்மி ஹன்ட்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பிரதமர் தெரசா மே-விற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள இருவர்களில் ஒருவரான ஜெர்மி ஹன்ட், சக போட்டியாளரான போரிஸ் ஜான்சனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிச்சுற்றில் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹன்ட் இடையே போட்டி நிலவுகிறது.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் இறுதிச்சுற்றின் வாக்கெடுப்பில் கன்சர்வேடிவ் கட்சியின் 160,000 உறுப்பினர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் ஒரு கோழை என ஜெர்மி ஹன்ட் சாடியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய ஜெர்மி ஹன்ட்-யிடம் விவாதம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செயலாளர் ஹன்ட், நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்காத போரிஸ் ஜான்சன் ஒரு கோழை. ஸ்கை தொலைக்காட்சியில், பிரெக்ஸிட் விவகாரம் பற்றிய விவாதத்திற்கான வாய்ப்பை ஜான்சன் நிராகரித்திருப்பது அவமரியாதைக்குரியது என்றார்.

நாம் என்ன செய்போகிறோம் என மக்கள் அறிய வேண்டும், மக்களின் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். போரிஸ் ஜான்சனின் தனிப்பட்ட வாழ்க்கை முக்கியமற்றது, ஆனால் வேட்பாளர்கள் தங்கள் பிரெக்ஸிட் நிலைகளை விளக்க வேண்டும் என ஹன்ட் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers