இந்தியாவில் காணாமல் போன பிரித்தானியர்கள்... ஒரு மாதத்திற்கு பின் வெளியானது முக்கிய தகவல்

Report Print Basu in பிரித்தானியா

இந்தியாவில் நந்தா தேவி சிகரத்தில் ஏற முயன்று போது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 8 பேரில் 7 பேரின் உடலை இந்தோ-திபெத்திய எல்லைப் பொலிஸ் குழு மீட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள 17,800 அடி உயரமுள்ள நந்தா தேவி சிகரத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவரும் வழிகாட்டியாக சென்றிருந்தார்.

கடந்த மாதம் 13-ம் திகதி முன்சியாரி பகுதியில் இருந்து மலை ஏற்றம் சென்ற அவர்கள் திடீரென மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், இந்தோ-திபெத்திய எல்லைப் பொலிஸ் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காணமல் போன பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் Mark Thomas(44), Ian Wade(45), Kate Armstrong(39) மற்றும் Zachary Quain(32) ஆகியோர் என சமீபத்தில் பெயர்கள் வெளியானது.

இந்நிலையில், 7 மலையேற்ற வீரர்களின் பிரேதங்களை இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு பொலிசார் மீட்டுள்ளனர். ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers