நடுவானில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்: பாதிவழியிலே லண்டனுக்கு திரும்பிய விமானம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனிலிருந்து துருக்கி நோக்கி சென்ற விமானத்தில் மது போதையில் பணியாளர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு துருக்கி நோக்கி ஜெட்2 விமானம் புறப்பட்டுள்ளது.

அடுத்த 25 நிமிடங்களில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் அங்கிருந்த பணியாளர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளார். மேலும் விமானத்தின் கதவை திறக்க முற்பட்டுள்ளார்.

இதனை பார்த்து பயந்துபோன பயணிகள், அந்த இளம்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, 6 பேர் கொண்ட சக பயணிகள் அந்த இளம்பெண்ணை இருக்கையில் அமர வைத்து, அவர் மடி மீதும் ஏறி அமர்ந்தனர்.

இதற்கிடையில் இந்த தகவல் விமான நிலைய பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடுவானில் விமானம் திருப்பப்பட்டு மீண்டும் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தை அடைந்தது.

அங்கு பொலிஸார் 25 வயதான அந்த இளம்பெண்ணை கைது செய்து அழைத்துச்சென்றனர். அதன்பிறகு அதிகாலை 5.15 மணிக்கு விமானம் துருக்கி சென்றடைந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers