நியூசிலாந்து பிரதமரின் மகள் பிறந்தநாளுக்கு பிரித்தானிய அரண்மனையிலிருந்து சென்ற பரிசு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா மகளின் முதல் பிறந்தநாளுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் பரிசு ஒன்றினை அனுப்பு அசத்தியுள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் கிளார்க் கேஃபோர்ட் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு, 'நெவ் தி அரோடர் ஆர்டெர்ன்' என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

பிரித்தானிய இளவரசர் வில்லியும் பிறந்த அதேநாளில் தான், நெவ் தி-யும் பிறந்திருந்தார்.

வில்லியம் பிறந்தநாள் நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், கிளார்க் கேஃபோர்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

அதோடு அல்லாமல் இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் தன்னுடைய மகளுக்கு அனுப்பியிருந்த பிறந்தநாள் பரிசினையும் பதிவிட்டு, இதனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக பிரித்தானிய இளவரசர் வில்லியம் தான் 10 மாத குழந்தையாக இருந்த சமயத்தில், இங்கிலாந்தில் உள்ள அரசு மாளிகையின் புல்வெளியில் Buzzy Bee வகை பொம்மைகளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்