வில்லியம் பிறந்தநாளில் ஹரி - மேகனிடம் இருந்து வந்த வாழ்த்து: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் பிறந்தநாளில் ஹரி - மேகனிடம் இருந்து வந்த வாழ்த்தினை பார்த்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே அரச தம்பதியினர் வில்லியம் - கேட் மற்றும் ஹரி - மேகன் ஆகியோர்களுக்கிடையிலான உறவு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் கென்சிங்டன் அரண்மனையிலிருந்து பிரிந்து தனியாக சென்றது முதலே இந்த பிரச்னை லேசாக வெளி உலகத்திற்கு தெரியவந்தது.

இதன் அடுத்த நடவடிக்கையாக இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி 2009 இல் அமைத்த, தி ராயல் பவுண்டேஷனில் இருந்து இளம்தம்பதியினர் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இன்று இளவரசர் வில்லியமின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஹரி - மேகன் தம்பதியினர், சாதாரண நபரை போல எளிமையாக, "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்