திருமணத்திற்கு முன் ஹரி இவர் மீது தீராத ஆசை வத்திருந்தாராம்: அவர் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மேகனை திருமணம் செய்வதற்கு முன் பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு நடிகை மீது தீராத மோகம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரி பல ஆண்டுகளாக Jennifer Aniston என்னும் நடிகை மீது ஆசை வைத்திருந்ததாகவும், பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்தில் வெளியான அவரது புகைப்படத்தைப் பார்த்து, அவர் இளவரசி போன்றவர் என்று அவரை விமர்சித்ததாகவும் பிரபல அமெரிக்க எழுத்தாளர் Ian Halperin தெரிவித்துள்ளார்.

Jennifer Anistonஐக் குறித்து எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தில், ஹரி அந்த நடிகையின் போன் நம்பரை வாங்கி, அவருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.

ஹரி தன் மீது ஆசை வைத்திருந்தது Jennifer Anistonக்கு தெரியும் என்றும் ஆனால், தங்களுக்குள் இருந்த வயது வித்தியாசம் கருதி அவர் அமைதியாக இருந்து விட்டதாகவும் Ian Halperin தெரிவித்துள்ளார்.

ஆனால் Jennifer Anistonஇன் செய்திதொடர்பாளர் ஒருவர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

என்றாலும் Halperin, தன்னைப் பொருத்தவரையில், Jennifer Anistonஐக் குறித்து எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தில் சொல்லப்பட்டவை உண்மை என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்