85 பெண்களை ஏமாற்றி சீரழித்த பிரித்தானிய டாக்சி ஓட்டுநர்: வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குதிரைப்பந்தயத்தில் பெருந்தொகையை வென்றதாககூறி, கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பெண்களை அழைத்து, மயக்க மருந்து கொடுத்து சீரழித்த நபர் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

John Derek Radford என்ற John Worboys (62) பிரித்தானியாவில் டாக்சி ஓட்டுநராக இருந்திருக்கிறார்.

குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெற்றதாக கூறி பெண்களை ஏமாற்றி, மது அருந்த அழைத்து, மதுபானத்தில் போதை மருந்து அல்லது மயக்க மருந்து கொடுத்து அவர்களை வன் புணர்வு செய்வது Worboysஇன் வழக்கம்.

2008ஆம் ஆண்டு 12 பெண்களை சீரழித்ததாக கைது செய்யப்பட்ட Worboys சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டதையடுத்து, இந்த ஆண்டு துவக்கத்தில் Worboysஐ விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Worboys விடுதலையாகிறார் என்ற செய்தி வெளியானதும், மேலும் பல பெண்கள் முன் வந்து தங்களையும் அவர் ஏமாற்றி வன்புணர்வு செய்ததாக புகாரளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அவரது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடைசியாக புகாரளித்த நான்கு பெண்கள் தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை, நேற்று Worboys ஒப்புக் கொண்டார்.

இதனால் Worboys இப்போதைக்கு விடுதலையாக மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 85 பெண்கள் வரை Worboys மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவரிடம் 100 பெண்கள் வரை மோசம் போக்கியிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

தீர்ப்பை செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ள நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்