குட்டி இளவரசரால் இரவில் உறக்கமில்லாமல் தவிக்கும் மேகன்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

குட்டி இளவரசர் ஆர்ச்சியை பராமரிக்கும் பணிக்கு புதிதாக ஒருவரை இளவரசர் ஹரி- மேகன் தம்பதி நியமனம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு பிறந்த குட்டி இளவரசர் ஆர்ச்சியை கவனித்துக்கொள்ளும் ஆயா வேலைக்கு புதியதாக ஒருவரை பணியில் அமர்த்தியிருப்பதாக, அரச குடும்பத்தின் வாழ்க்கை வரலாறுகளை எழுதி வரும் கேட்டி நிக்கோல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், மேகனின் தாய் டோரியா தற்போது அமெரிக்காவிற்கு திரும்பிட்டார்.

இதனால் இரவு முழுவதும் மேகனால் உறங்க முடிவதில்லை. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பசியின் காரணமாக குட்டி இளவரசர் அழுவதால், மேகன் சிரமப்பட்டு வருகிறார்.

இதை சரி செய்வதற்காக மிகவும் விரிவான வெளிப்பாடான ஒப்பந்த அடிப்படையில் ஆயா ஒருவரை மேகன் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இருப்பினும் அவரை இரவு நேர பணிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் கேட்டி நிக்கோல் கூறியிருக்கும் இத்தகவலுக்கு அரண்மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்