40 வயது வித்தியாசம் கொண்ட இளைஞனை திருமணம் செய்த பெண்! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதி 40 வயது வித்தியாசம் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் தங்களுடைய குடும்ப உறவு எப்படி இருக்கிறது என்பதை கூறியுள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவ தம்பதி Edna Martin(83)-Simon(44). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவரும் 40 வயது வித்தியாசம், இதனால் இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இவர்களின் உறவு? என்று பல கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் தங்களின் உறவைப் பற்றி Edna பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். இருவருக்கும் இடையே இருக்கும் காதல் அப்படியே இருக்கிறது. குறிப்பாக எங்களின் உறவு படுக்கையறையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொது இடங்களுக்கு சென்றால் கூட இருவரும் இடையில் முத்தம் கொடுத்து கொள்வோம். வயது வித்தியாசத்தைப் பற்றி எல்லாம் நினைக்கவே மாட்டோம், எங்களின் காதல் அந்தளவிற்கு இருக்கிறது.

இவர்களின் வீடு Somerset-ன் Weston-super-Mare பகுதியில் இருக்கிறது.

Edna-வுக்கு நான்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 2003-ஆம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அப்போதே இருவருக்கும் பிடித்து போக, இருவரும் ஒருவரை ஒருவர் போன் நம்பர் மாற்றிக் கொண்டனர்.

அதன் பின் தொடர்ந்து போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதற்கு முன் முதல் திருமணம் செய்து கொண்ட Edna அவர் முதல் கணவருடன் 37 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் அவர் ஏன் முதல் கணவரை பிரிந்தார் என்பது குறித்து எந்த ஒரு காரணமும் வெளியாகவில்லை. Edna-வின் காதலுக்கு அவருடைய பிள்ளைகளான Lorraine(59) மற்றும் Russell(57)-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இவர்களுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்