இளவரசி கேட்டைப் பார்த்து சிறுமி கேட்ட கேள்வி: அவரது ஆச்சரிய ரெஸ்பான்ஸ்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
672Shares

பிரித்தானிய இளவரசி கேட், Cumbria என்னும் இடத்திற்கு சென்றிருந்தபோது செம்மறியாடுகளின் ரோமம் கத்தரிப்பதைப் பார்ப்பதற்காக தனது கணவர் இளவரசர் வில்லியமுடன் சென்றிருந்தார்.

அப்போது அவர் ஜீன்சும் வெள்ளை சட்டையும் அணிந்து அதற்கு மேல், கோட் ஒன்று அணிந்திருந்தார்.

கேஸுவலாக அவர் அணிந்திருந்த உடையை பலரும் பாராட்டினாலும், ஒரு குட்டிப்பெண்ணுக்கு மட்டும் அவரது உடை பிடிக்கவில்லை.

அவர், ஒரு கார்ட்டூன் சினிமா கதாபாத்திரமான எல்சா என்னும் இளவரசியைப்போல உடையணியவில்லை என்பதால் அந்த குட்டிப்பெண் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருக்கிறாள்.

என்றாலும் அவளும் அவளது அக்காவும் இளவரசி கேட்டுக்கு பூங்கொத்து ஒன்றை பரிசாக அளித்து, அவரோடு கை குலுக்கி உள்ளனர்.

அந்த சிறுமியிடம், அவர் ஒரு இளவரசி என்று கூறிய அந்த சிறுமியின் தந்தை, உனக்குத்தான் இளவரசிகளைப் பிடிக்குமே என்று கூறியுள்ளார்.

அந்த சிறுமி அப்பாவிடம் ரகசியமாக ஏதோ கூற, அவர் கேட்டிடம், நீங்கள் ஏன் இளவரசி எல்சாவைப்போல் உடை அணியவில்லை என்று என் மகள் கேட்கிறாள் என்று கூறியிருக்கிறார்.

அந்த கேள்விக்கு இளவரசி கேட் சும்மா சிரித்து விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரது ரெஸ்பான்ஸ் குழந்தையை மட்டும் அல்ல, அந்த செய்தி வெளியான பின் அவரது ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அப்படி என்ன சொன்னார் கேட்?

நான் ஆடுகளை பார்க்க போக வேண்டியிருந்ததால்தான் இப்படி கோட்டும் ட்ரவுசரும் போட்டு வந்து விட்டேன், என்னை மன்னித்து விடு என்று கூற, அதையே செய்தியாக்கிவிட்டன பிரித்தானிய பத்திரிகைகள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்