லண்டனுக்கு தப்பிய இந்திய கோடீஸ்வர வைர வியாபாரி... நீதிமன்றம் அளித்த உத்தரவு

Report Print Raju Raju in பிரித்தானியா

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரான வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு, பிரித்தானிய நீதிமன்றத்தால் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டொலருக்கு அதிகமான தொகையை பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பினார்.

அவர் பிரித்தானியாவில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

இந்நிலையில் நீரவ் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் திகதி முடிந்த நிலையில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது. அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பின்னர் மூன்றாவது முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி நான்காவது முறையாக இன்று ஆஜரானார். தற்போது நான்காவது முறையாக மீண்டும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்