உலகை காப்பாற்ற பிரித்தானியா எடுத்த சூப்பர் முடிவு.. விரைவில் புதிய சட்டம் அமல்

Report Print Basu in பிரித்தானியா
542Shares

பிரித்தானியா எதிர்கால சங்கதியருக்கு பாதுகாப்பான சுற்றுச்சுழலை உருவாக்க புதிய இலக்கை அமைத்துள்ளது. இதன் மூலம் ஜி7 நாடுகளில் இது போன்ற இலக்கை அமைத்த முதல் நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெற்றுள்ளது.

உலகில் அதிகரித்து வரும் மாசு காரணமாக சுற்றுச்சூழலில் பாதிப்படைந்து காலநிலை மிக மோசமாக மாறி வருகிறது. இதை, கட்டுப்படுத்த ஐ.நா, உலக நாடுகளுக்கு அழைப்பும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில், 2050 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா, ஜீரோ கிரீன்ஹவுள் வாயு மாசு கொண்ட நாடாக மாறும் என அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தற்போர், 80 சதவீதம் வரை கிரீன்ஹவுள் வாயு மாசை குறைக்க பிரித்தானியா குறிக்கோளாக வைத்துள்ளது. இதற்காக பிரித்தானியா தனது காலநிலை இலக்குகளைத் தீவிப்படுத்த உள்ளது.

புதிய இலக்கை இணைத்துக்கொள்ள இருக்கும் காலநிலை மாற்றம் நடவடிக்கையை திருத்தும் வகையில், யூன் 12 ம் திகதி நாடாளுமன்றத்திற்கு முன் சட்டமாக்கப்படும் என அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியா பிரதமர் தெரசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது குழந்தைகளுக்காக இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க இப்போது, மேலும் வேகமாய் செயல்பட வேண்டிய நேரம் இது.

2050 க்குள் நிகர ஜீரோவை அடைவது ஒரு இலட்சிய இலக்கு, ஆனால் எதிர்கால தலைமுறையினருக்கு நமது கிரகத்தை பாதுகாப்பதை உறுதி செய்வது மிக முக்கியம் என தெரசா மே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்