உலகிலேயே இதுதான் முதல்முறை.. வைரலாகி வரும் பிரித்தானிய நீச்சல் குளத்தின் மாதிரி புகைப்படம்!

Report Print Kabilan in பிரித்தானியா

உலகின் 360 டிகிரி கொண்ட உலகின் முதல் நீச்சம் குளம் லண்டனில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் மாதிரி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

360 டிகிரி கொண்ட உலகின் முதல் நீச்சல் குளத்தை, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கட்டடங்களில் ஒன்றான இன்ஃபினிட்டியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மொத்தம் 55 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தின் மொட்டை மாடியில் அமைய உள்ள இந்த நீச்சல் குளத்தின் மாதிரி புகைப்படங்களை, அந்நாட்டு பொறியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 200 மீற்றர் உயரம் வரை வெறும் கண்ணாடிகளால் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. அதில், 6,00,000 லிட்டர் அக்ரலிக் தண்ணீர் நிரப்பப்படும்.

இதில் நீந்துபவர் தண்ணீருக்கு அடியில் இருந்து வெளியேயும், வெளியில் இருந்து தண்ணீருக்கு அடியிலும் மிக தெளிவாகப் பார்க்க முடியுமாம். காலை நேரங்களில், இந்த நீச்சல் குளத்தில் உள்ள நீர் மிகுந்த தெளிவாகவும், இரவு நேரங்களில் அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு ஒளியில் பிரகாசமாகவும் காணப்படும் என்று கூறப்படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட உள்ளதாக கூறப்படும் இந்த நீச்சல் குளத்தின் அடிப்பகுதியும் கண்ணாடியால் வடிவமைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டடத்துக்குள் வரும் மக்கள், மேலே நீச்சல் குளத்தில் உள்ளவர்களைப் பார்க்கலாம்.

ஆனால் அந்த நீச்சல் குளத்துக்கு செல்வதற்கான படிகள், மாதிரி புகைப்படத்தில் இல்லை. இதன் காரணமாகவே படி எங்கே இருக்கிறது என நெட்டிசன்கள் இந்த மாதிரி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்