பிரித்தானிய குட்டி இளவரசர் ஆர்ச்சியின் முதல் விமான பயணம்: எங்கே தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு பிறந்த குட்டி இளவரசர் ஆர்ச்சி தமது பாட்டியுடன் நேரத்தை செலவிட அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு பிறந்த முதல் குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என பெயரிட்டுள்ளனர்.

குட்டி இளவரசர் பிறந்து சுமார் ஒரு மாத காலமான நிலையில், தற்போது பாட்டியுடன் நேரத்தை செலவிட, மேகனும் குழந்தை ஆர்ச்சியும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

மேகனின் தாயார் டோரியா தமது மகளின் பிரசவ காலத்தில் உடனிருந்து கவனித்துக் கொண்டவர்.

மட்டுமின்றி சில நாட்கள் உடனிருந்துவிட்டு, அதன் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பியுள்ளார்.

தற்போது 37 வயதான மேகன், தமது குட்டி இளவரசருடன் அமெரிக்கா செல்ல உள்ளார். பிறந்த குழந்தைகள் தங்கள் பாட்டியுடன் சில காலம் செலவிடுவது ஒன்றும் புதிதல்ல எனவும்,

பிரித்தானிய அரச குடும்பமும் இதில் விதிவிலக்கல்ல என முக்கிய அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே மேகனின் தாயார் டோரியா பிரித்தானியாவுக்கு குடிபெயர்வதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி,

குழந்தை ஆர்ச்சிக்கு அவரது பாட்டியின் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை, அவரது உதவி இந்த நேரத்தில் தான் அதிகமாக தேவைப்படும் எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்