பிரித்தானிய பிரதமர் தெரஸா மே ராஜினாமா!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தெரஸா மே, தனது கட்சி தலைவர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

பிரதமராக மட்டுமல்லாது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்த தெரஸா மே, நேற்று தனது ராஜினாமா கடிதத்தை 1922 கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.

அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட கமிட்டியும், உடனடியாக, கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. ஏற்கனவே 11 வேட்பாளர்கள் தாங்கள் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்கள்.

என்றாலும் அவ்வாறு போட்டியிடுபவர்களுக்கு, குறைந்தபட்சம் பதவியிலிருக்கும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இத்தனை நாட்கள் டென்ஷனாக காணப்பட்ட தெரஸா மே தனது வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

1922 கமிட்டியின் கால அட்டவணைப்படி ஜூலை மாதம் 22ஆம் திகதிக்குள் புதிய கட்சித்தலைவர் பொறுப்பேற்க வேண்டும், அத்துடன் கட்சித் தலைமை பொறுப்பேற்கும் அதே நபர், பிரதமராகவும் பொறுப்பேற்றுக்கொள்வார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்