காதலில் இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் தெரிவித்த இளம்பெண்: மறுநாள் நிகழ்ந்த சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் புதிய உறவில் இருக்கிறேன் என பேஸ்புக்கில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த அடுத்த நாளே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Salfordஐச் சேர்ந்த சுமார் 20 வயதிருக்கும் Regan Tierney என்ற பெண் தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.

அவசர உதவிக் குழுவினர் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

அவருடன் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் இருந்தது தெரியவந்துள்ளது. அவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள்தான், தான் காதலில் விழுந்திருப்பதாக முகநூலில் செய்தி தெரிவித்திருந்தார் Tierney.

அவரது வீட்டிலிருந்து, ஒரு பெண் வேண்டாம் வேண்டாம் என்று கத்தும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் பொலிசார் அங்கு விரைந்தனர்.

என்ன நடந்தது, கொலை செய்தது யார் என அந்த தகவலும் வெளிவராத நிலையில், குற்றவாளியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் பொலிசார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்