மனைவி வேறொரு ஆணுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்த கணவர்: அடுத்து நடந்த விபரீதம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மனைவி வேறொரு ஆணுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்த கணவர், தங்கள் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கருதியதால் குழந்தையை அடித்துக் கொன்ற கோர சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.

Swindonஐச் சேர்ந்த Paul Rich (53)ம் Kirsty Bradleyம் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

Kirsty Bradleyக்கு Patrick என்ற மூன்று மாத குழந்தை இருந்தது. அந்த குழந்தை Paulக்கு தான் பிறந்தான் என்றும், அவனது பிறப்பு சான்றிதழில் Paul பெயரைத்தான் சேர்க்கப்போவதாகவும் கூறியிருந்தார் Kirsty.

ஆனால் Paulஉடன் Kirsty அந்தரங்கமாக பழகாததோடு, அவருக்கு வேறொரு காதலரும் இருந்தார்.

அந்த காதலருக்கு Kirsty அனுப்பிய குறுஞ்செய்திகளை Paul தற்செயலாக பார்க்க நேரிட்டது.

அந்த குறுஞ்செய்திகளில் Kirsty, அந்த நபரிடம் Patrickஐ நம்முடைய குழந்தை என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே Patrick தனக்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்த Paul, ஒரு நாள் Kirsty வீட்டில் இல்லாதபோது குழந்தையை தாக்கியுள்ளார்.

அதில் குழந்தைக்கு மாரடைப்பு நேரிட, அது பேச்சு மூச்சற்ற நிலைக்கு போயுள்ளது. உடனடியாக ஆம்புலன்சை அழைத்த Paul, குழந்தை தன் கையிலிருந்து தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் பொலிசாரின் தீவிர விசாரணைக்குப்பின், தான் குழந்தையை தாக்கியதாகவும், வீசியெறிந்ததாகவும் ஒப்புக்கொண்டார் Paul.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் Paulக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்