பிரித்தானியனருடன் சேர்த்து சகோதரியை கொலை செய்த மைத்துனருக்கு மரண தண்டனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கூலிப்படையை வைத்து தன்னுடைய சகோதரி மற்றும் அவருடைய பிரித்தானிய கணவரை கொலை செய்த மைத்துனருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ஆலன் ஹாக் (64) என்கிற மில்லியனர், கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் தன்னுடைய மனைவியுடன் மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, வீட்டு தோட்டத்தில் ஆலன் ஹாக் மற்றும் அவருடைய மனைவி நூட் சுடீன் (61) புதைக்கப்பட்டிருப்பதை மோப்ப நாய் கண்டறிந்தது.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் நூட் சுடீனின் சகோதரன், வாரட் சட்சாகிட் (63)-ஐ கைது செய்தனர்.

அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தம்பதியினரின் மீது இருந்த பொறாமையால் அவர்களை கொலை செய்ய கிட்டிபாங் காம்வான் (24) மற்றும் ஃபயா கம்சாய் (63) என்கிற இரண்டு கூலிப்படையினரை ஏற்பாடு செய்துள்ளான்.

நூட் சுடீனை சுத்தியலால் அடித்தும், ஆலனை துப்பாக்கியால் சுட்டும் கொல்ல வேண்டும் என கூறியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, வாரட் சட்சாகிட், கிட்டிபாங் காம்வான் மற்றும் ஃபயா கம்சாய் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் கொலைக்கான திட்டம் வகுத்து கொடுத்த சிம உப்பன் (60) என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்