லண்டனில் முதலிடம்... அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

துபாய், சிங்கப்பூர் போன்ற நகரங்களை விட இந்திய முதலீட்டாளர்கள் இப்போது லண்டனிலே அதிகம் முதலீடு செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் மொத்தம் 52 தொழில் திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாகவும், அடுத்தபடியாக அமெரிக்கா (51), ஐக்கிய அரபு அமீரகம் (32) அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக கூறப்படுகிறது.

நிதிச் சேவை, தொழில்நுட்பச் சேவை ஆகியவற்றில் இந்தியாவும் லண்டனும் வலுவானவை. இதன் காரணமாகவே சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ற சந்தையாக இந்தியா திகழ்கிறது.

நிறுவனங்களுக்குக் கடன் தரத் தேவைப்படும் நிதியும் தாராளமாக இருக்கிறது; தங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு நிதியைத் தேடும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

ஆனால், இவ்விரண்டையும் இணைக்கும் புள்ளியாகச் செயல்பட்ட தொடர்பு இப்போது அறுந்துவிட்டது. இதன் விளைவாக, சிறு நடுத்தரத் தொழில் பிரிவுகள் 30 சதவீதம் உயர் வட்டிக்குக் கடன் வங்கித் தொழில் நடத்துகின்றனர்.

நிதி நிறுவனங்கள் தகுந்த உத்தியைக் கையாண்டால் இவர்களது நிதித் தேவையைப் பூர்த்திசெய்து நல்ல வருவாய் ஈட்டலாம்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்திய நிறுவனங்கள் லண்டனில் மட்டும் 249 கோடி பவுண்டுகள் மதிப்புக்கு முதலீடு செய்துள்ளதகாவும், இதன் மூலம் 5,691 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

லண்டனில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-ல் விரிவடையத் தொடங்கியது.

32 தொழில்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டது. 2017 உடன் ஒப்பிடும்போது 2018-ல் இந்தியர்களின் அன்னிய நேரடி முதலீடு 255 சதவீதம் அதிகரித்திருக்கிறது. லண்டன் மட்டுமில்லாமல் முழு பிரித்தானியாவுடன் ஒப்பிட்டால் அது 100% அதிகரித்திருக்கிறது. இதில் லண்டன் மாநகருக்கு மட்டும் 60 சதவீதம் அடங்கும்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர்த்தகக் குழுவை அனுப்புகிறது.

அக்குழு இந்தியாவில் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் செய்து, வர்த்தக முதலீட்டைப் பரஸ்பரம் ஊக்குவிக்கும். உடலில் அணியக்கூடிய மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், நிதி ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள், வேலைக்கு ஆள் எடுப்பது பயிற்சியளிப்பது ஆகியவற்றில் அனுபவம் உள்ள நிறுவனங்கள், ரகசியத் தகவல் தரவுகளைக் காக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் மூத்த நிர்வாகிகள் இந்தியா வரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

லண்டனில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்களுக்காக பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் தனி அலுவலகங்களையே திறந்திருக்கிறது லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் லண்டனில் ஜூன் மாதம் நடைபெறும் நேரத்தில், இந்திய முதலீட்டாளர்களை வரவழைக்க லண்டன் வர்த்தக ஊக்குவிப்புப் பிரிவு திட்டமிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்