தெரசா மே பதவி விலகியது பிரித்தானியாவிற்கு நல்லது: அதிர்ச்சி பதிலளித்த ட்ரம்ப்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தெரசா மே பதிவு விலகியிருப்பது 'அவருடைய நாட்டிற்கு நல்லது' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சி பதிலளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தன் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிப்பதால் பெரும் நெருக்கடியை சந்திப்பதாகவும், இதன் காரணமாக வரும் ஜூன் 7-ம் திகதியன்று பதவி விலக உள்ளதாக கண்ணீருடன் பேசினார்.

இந்த நிலையில் தெரசா மே பதிவு விலகியிருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தெரசாவிற்காக நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். அவர் ஒரு நல்ல பெண். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

அவருடைய முடிவு குறித்து சிலர் ஆச்சர்யப்பட்டிருக்கலாம், சிலர் ஆச்சர்யப்படாமலும் இருக்கலாம். ஆனால் இந்த முடிவு அவருடைய நாட்டிற்கு நல்லது. நான் இன்னும் இரண்டு வாரங்களில் அவரை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்