தெரசா மேயின் ராஜினாமா உரைக்கு முன் பிரபலமான ஒரு நபர்: யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவரால் ஒருவர் பிரபலமாகியுள்ளார்.

அவர் போரிஸ் ஜான்சனோ அல்லது ஜெரமி கார்பினோ அல்ல!

வெளியாகியுள்ள வீடியோவில், ஊடகவியலாளர்கள் பிரதமர் தெரசா மேயின் வீட்டின் முன் அவருக்காக காத்திருக்க, வாட்டசாட்டமான ஒரு நபர் ஒலிபெருக்கியின் முன் வந்து நிற்கிறார்.

அவர் வேறு யாருமல்ல, ஒலிபெருக்கியை சோதிப்பதற்காக வந்த சவுண்ட் எஞ்சீனியர்தான்.

தெரசா மேக்காக காத்திருந்த கெமராக்கள் படபடவென அவரை படம்பிடிக்கின்றன. சற்றே சங்கோஜப்பட்டு அவர் நகர முயலும்போதும், ஊடகவியலாளர்கள் அவரை போஸ் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

அவரது புகைப்படம் ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில், ஒலிபெருக்கிக்காரர் என்று அழைக்கப்படும் அவர் பிரபலமாகிவிட்டார்.

இவர் அடுத்த பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் ஜோக்கடிக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் அவர்.

Laura Holland என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளில் டவ்னிங் தெருவில் ஒழுங்காக தனது வேலையைச் செய்தவர் இந்த ஒலிபெருக்கிக்காரர் மட்டும்தான் என்று ட்வீட்டியுள்ளார்.

Meanwhile Karl என்பவர், உடனடியாக பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், எத்தனை பேர் போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக இந்த ஒலிபெருக்கிக்காரரை தேர்ந்தெடுப்பார்களோ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்