லண்டன் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ: வெடிச்சத்தம் கேட்டதாகவும் தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள சேமிப்பு கிடங்கு ஒன்றில் பற்றியெரிந்த தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்களுடன் 70 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று லண்டனிலுள்ள ஜேர்மன் சாலையில் அமைந்துள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

தீயை முற்றிலும் அணைக்க, 10 தீயணைப்பு வாகனங்களுடன் 70 தீயணைப்பு வீரர்கள் நாள் முழுவதும் போராட வேண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

சேமிப்புக் கிடங்கின் கூரையின் பெரும்பகுதி தீயில் எரிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மிஞ்சியிருக்கும் தீ பரவாமல் தடுப்பதற்காக தொடர்ந்து இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே இருப்பார்கள் என்று தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்திலுள்ளோர் புகை காரணமாக தங்கள் வீட்டு ஜன்னல்களை மூடியே வைக்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார்கள்.

தீ விபத்து நடந்த பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், எதனால் தீவிபத்து ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

விபத்து தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்