பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் தெரசா மே.. கண்ணீருடன் அறிவித்தார்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியா பிரதமர் தெரசா மே தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் யூன் 7ம் திகதி பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை பவர்புல் 1922 குழுவின் தலைவரான கிரஹாம் பிராடிவுடனான சந்திப்பிற்கு பின்னர், பதவி விலகுவதற்கான தனது திட்டங்களை ஊடகங்கள் வயிலாக அறிவித்தார் தெரசா மே.

அப்போது பேசிய தெரசா மே, இது நாட்டின் சிறந்து நலனுக்காக நான் எடுத்த முடிவு. பிரதமராக பதவி வகித்தது என் வாழ்வின் கௌரவம். நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் நான், ஆனால் நிச்சயமாக கடைசியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

தெரசா மே-வின் பிரெக்ஸிட் திட்டத்தை அவருடைய கட்சி சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே எதிர்த்தனர். இதனால், ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் பதவி விலக நேரிட்டதாக கூறப்படுகிறது. தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரித்தானியா நாடாளுமன்றத்தால் மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்