வெளிநாட்டில் வாயில்லா ஜீவனை காப்பாற்றிய பிரித்தானிய பெண்கள்: நீதிமன்றம் எடுத்த கடுமையான நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஓமான் நாட்டில் தெரு நாய்களை திருடியதாக கூறி இரு பிரித்தானிய ஆசிரியர்களை அந்த நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியர்களான 33 வயது ஜெனிபர் கிரீன் மற்றும் அவரது நெருங்கிய தோழி ஆகியோரே கடந்த 12 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

கொடூரமான உரிமையாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நாய்களையே தாங்கள் காப்பாற்றியதாக ஜெனிபர் கிரீன் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் தெரிவிக்கின்றனர்.

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் ஆங்கில பாட ஆசிரியர்களாக இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.

கொளுத்தும் வெயிலில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட இரு நாய்களை ஜெனிபர் கிரீன் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

ஆனால் ஓமான் அதிகாரிகள், பிரித்தானிய ஆசிரியர்கள் இருவர் மீதும் நாய்களை கடத்த முயற்சி செய்தது, மது போதையில் வாகனம் செலுத்தியது, போதிய ஆதாரமின்றி பொதுவெளியில் பிரச்னையை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதனிடையே தமது சகோதரியின் நிலை குறித்து கேள்வியுற்ற மைக் கிரீன், ஓமான் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

செய்யாத குற்றத்திற்காக தமது சகோதரியை ஓமான் நிர்வாகம் சிறையில் தள்ளியதாக கூறும் அவர்,

நாய்களின் உரிமையாளருக்கு 4,000 பவுண்டுகள் அபராதமாக செலுத்திய பின்னர் பொலிசார் அந்த வழக்கில் இருந்து விடுவித்ததாகவும்,

ஆனால் ஜெனிபர் மற்றும் அவரது தோழி மது போதையில் இருந்ததாக கூறி மேலதிக விசாரணைக்காக நீதிபதி அழைத்துள்ளார்.

இதனையடுத்தே இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கிரீன் தெரிவித்துள்ளார்.

ஜெனிபர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓமானில் தங்கி பிரிட்டிஷ் கவுன்சிலில் பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் இந்த விவகாரம் தொடர்பில் ஓமான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சூழலில் எந்த தகவலையும் வெளியிட முடியாது என கூறியுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள், இறுதி நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் அறிந்த பின்னரே பிரித்தானிய தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers