மான்செஸ்டர் போல் ஃபிராட்டன் பார்க் மைதானத்தில் தாக்குதல் நடக்கும்.. பொலிஸ் தீவிரம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் 2017 மான்செஸ்டர் தாக்குதல் போல் ஃபிராட்டன் பார்க் தைானத்தில் தாக்குதல் நடத்தப்படும் என சமூக வலைத்தளத்தில் மிரட்டல் பதிவிட்ட நபர்களில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போர்ட்ஸ்மவுத் நகரில் உள்ள ஃபிராட்டன் பார்க் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் அரையிறுதி இரண்டாவது லெக் போட்டியில் போர்டஸ்மவுத், சன்டர்லேண்ட் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில், குறித்த போட்டியின் போது தாக்குதல் நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் பல மிரட்டல் பதிவுகள் பதிவிடப்பட்டன. 2017 மான்செஸ்டர் அரங்கில் நடந்த தாக்குதல் போல் ஃபிராட்டன் பார்க் மைதானத்தில் தாக்குதல் நடத்தப்படும். 150 ரசிகர்கள் கொல்லப்படுவார்கள் என பல மிரட்டல் பதிவுகள் பதிவிடப்பட்டன.

இந்நிலையில், 150 ரசிகர்கள் கொல்லப்படுவார்கள் என பதிவிட்ட 22 வயதுடைய இளைஞனை கண்டுபிடித்த பொலிசார், வடக்கு யார்க்ஷயர், வடக்குஅலர்ட்டன் பகுதியில் வைத்து கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஹாம்சயர் பொலிஸ் ஊடகப்போச்சாளர் வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைத்தளம் மூலம் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இடம்பெறாது என உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போர்ட்ஸ்மவுத் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தீவிர சோதனைக்கு பின்னரே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள், எனவே, ரசிகர்கள் முன்கூட்டியே வர வேண்டும் என அறிவுறுதப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers