குழந்தை பிறப்பதற்கு முன் முதல் ஆளாக சென்று மேகனை சந்தித்த ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மேகனை முதல் ஆளாக சென்று, ராணி சந்தித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரி - மேகன் தம்பதியினர் தங்களுடைய முதல் குழந்தையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நிறைமாத கர்ப்பிணியான மேகனுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், மற்ற சிலர் இனிமேல் தான் பிறக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தம்பதியினர் குழந்தை பிறப்பதை ரகசியமாக வைத்திருப்போம் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதற்கேற்றாற்போல நீண்ட நாட்களாகவே மேகன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதால் அரச குடும்ப விசுவாசிகளுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதற்கு முன், முதல் ஆளாக மேகனை ராணி சந்திக்க விரும்பியதாகவும், அதற்காகவே அவர் மேகன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள வின்ட்சர் கோட்டையில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈஸ்டர் சமயத்தில் அங்கு தங்கியிருந்த ராணி, ஹரி-மேகன் தம்பதியினருடன் சிறிது நேரம் செலவளித்துள்ளார். அவர்களை தொடர்ந்து தான் இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட், மேகன் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.

ஆனால் இந்த தகவல் குறித்து பக்கிங்காம் அரண்மனை, வில்லியம் - கேட் சென்றது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் எனக்கூறி விளக்கம் கொடுக்க மறுத்துள்ளது.

பிறக்கவிருக்கும் சசெக்ஸ் குழந்தையை முறையாக ராணி தன்னுடைய வீட்டிற்கு வரவழைக்க உள்ளார். இதன்மூலம் குழந்தையை முதல் ஆளாக ராணி தான் பார்ப்பார் என தெரிகிறது. அதன்பிறகே தம்பதியினர் தங்களுடைய வீட்டிற்கு மீண்டும் திரும்புவார்கள் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்