மேகனின் பிரசவ திகதி தாண்டி விட்டது, என்ன ஆயிற்று? குழப்பத்தில் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் பிரசவ திகதி தாண்டி விட்டதாக கூறப்படும் நிலையில், இதுவரை ஹரி மேகன் தரப்பிலிருந்து எந்த தகவலும் வராததால் அவர்களது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே தங்களுக்கு குழந்தை பிறப்பதை தனிப்பட்ட விடயமாக வைத்திருக்கப்போவதாக ஹரி மேகன் தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே குழந்தை பிறந்து விட்டதா இல்லையா, அல்லது குழந்தை பிறந்த விடயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

லண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றில் பங்குபெற்ற இளவரசர் ஹரியும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

இதற்கிடையில் மேகனின் அம்மாவும் கடந்த வாரம் பிரித்தானியாவுக்கு வந்து தனது மகளுடன் ஒரு வாரம் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இன்னமும் மேகனின் பிரசவம் குறித்த எந்த செய்தியும் வெளிவராததால் மக்கள் பொறுமையிழந்துள்ளனர்.

ட்விட்டர் பயனர் ஒருவர் நான் மிகவும் பொறுமையிழந்தும் எதிர்பார்ப்போடும் கணப்படுகிறேன்.

எங்கே இந்த ராஜ குழந்தை Baby Sussex?, ஹரி மேகனிடமிருந்து ஏதாவது தகவல் உண்டா என்று கேட்டுள்ளார்.

இன்னொருவர், மேகன், எங்கே எனது ராஜ குழந்தை என்கிறார்.

மற்றவர்கள் எப்போது மேகனுக்கு குழந்தை பிறக்கும் என்ற கணிப்பில் இறங்கியுள்ள நிலையில், ஒருவர் நிச்சயம் ஏப்ரல் 30 அன்றுதான் மேகனுக்கு குழந்தை பிறக்கும், தன் உள்ளுணர்வு அப்படித்தான் சொல்கிறது என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்