லண்டன் வீட்டில் ப்ரீஸரில் இரண்டு பெண்களின் உடல்கள்: தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு பெண்களின் உடல்கள் ஒரு ப்ரீஸரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் தோண்ட தோண்ட பல உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

கிழக்கு லண்டனிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதோ நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு ஒரு பிளாட்டில் இருந்த ஒரு பிரீஸருக்குள் இரண்டு பெண்களின் உடல்கள் இருந்தன.

உடல்களைக் கைப்பற்றிய பொலிசார் உடற்கூறு பரிசோதனைக்காக அவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த பிளாட்டில் வசித்த நபர் பாலியல் குற்றவாளியாக அரசால் முத்திரை குத்தப்பட்ட ஒரு நபர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இறந்த பெண்களில் ஒருவர் Mary Jane Mustafa,(38) என்னும் பெண் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

காரணம், Mustafa அந்த பிளாட்டில் வசித்த அந்த பாலியல் குற்றவாளியின் நண்பர் என அக்கம்பக்கத்தார் தெரிவித்துள்ளார்கள்.

Mustafa ஓராண்டுக்குமுன் ஒரு நாள் திடீரென மாயமானார். எனவே கிடைத்த உடல்களில் ஒன்று Mustafaவினுடையதாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் விசாரணையில் அந்த பிளாட்டில் வாழ்ந்த அந்த சந்தேகத்திற்குரிய நபர், பல பெண்களை வீட்டிற்கு கூட்டி வந்து இரவெல்லாம் பார்ட்டி நடத்துவதுண்டு என்றும் ஒரே சத்தமாக இருக்கும் என்றும் அக்கம் பக்கத்தார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் வருவதையறிந்த அந்த நபர், பொலிசார் வருவதற்கு சற்றுமுன் அங்கிருந்து தப்பி விட்டிருக்கிறார்.

பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ள பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்