திருமண நாளில் இளவரசிக்கு முக்கியமான கெளரவம் வழங்கிய ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி கேட் திருமண நாளை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ராணி மாற்றியிருக்கிறார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியமை கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதியன்று கேட் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுடைய 8 வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பலரும் அரச தம்பதியினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை இணையதளத்தின் வாயிலாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமண நாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக இளவரசி கேட்டுக்கு முக்கியமான கெளரவம் ஒன்றினை ராணி வழங்கியுள்ளார்.

'Dame Grand Cross' என்கிற கௌரமானாது ராணியால் இளவரசி கேட்டிற்கு வழங்கப்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்திருந்தது.

இதன்மூலம் ராணியின் தனிப்பட்ட சேவையாளராக இளவரசி கேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவியானது அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் அல்லது நாடு, மாகாணத்தை வழிநடத்தும் அதிகாரி அல்லது பேரரசரின் மூத்த பிரதிநிதிகளுக்கு தான் வழங்கப்படும்.

இதேபோன்று 2012 ஆம் ஆண்டு இளவரசி கேமிலாவின் திருமண நாளில் இந்த விருதினை வழங்கி ராணி கௌரவித்திருந்தார்.

இதில் உறுப்பினர்களாக இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட், கேமிலா, சோஃபி ஆகியோர் உள்ளனர்.

இறுதியாக 2017ம் ஆண்டு இளவரசர் பிலிப் இந்த விருதினை பெற்று உறுப்பினராக இணைந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்