உலகிற்கு மிரட்டல் விடுத்த ஐஎஸ் பயங்கரவாதியுடன் இலங்கை தற்கொலை குண்டுதாரிக்கு தொடர்பு? விசாரணையை பலப்படுத்தும் அரசாங்கம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இலங்கை தாக்குதலை தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரித்தானிய பாதுகாப்பு படைகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குரோகடைல் செல்ஸ் அல்லது ஸ்லீப்பர் செல்ஸ் (crocodile cells or sleeper cells ) பதுங்கியிருக்கிறார்களா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரித்தானியாவின் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதல்தாரிகளில் ஒருவரான Abdul Lathief Jameel Mohamed, பிரித்தானியாவில் கல்வி கற்றவர் என்பதால் அவருக்கும், பிரித்தானிய தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கும் என புலனாய்வு பிரிவு ஆராய்ந்து வருகின்றனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதி ஜிகாதி ஜான், பல்வேறு வீடியோக்களில் தோன்றி உலகிற்கு மிரட்டல் விடுத்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. பிணையக்கைதிகளை கொலை செய்து ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட பல்வேறு வீடியோக்களில் ஜிகாதி ஜான் தோன்றியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

அஜிகாதி ஜான் 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.

ஜிகாதி ஜான் இறந்துவிட்டாலும் அவனுடன் இணைந்து செயல்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும், இலங்கை தற்கொலை குண்டுதாரியின் Abdul Lathief க்கு ஜிகாதி ஜானுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Abdul Lathief சிரியாவுக்கு பயணம் செய்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்தபோது, ஜிகாதி ஜானை சந்தித்திருக்கலாம் அல்லது இணையதளம் தொடர்பு இருந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Abdul Lathief இலங்கைக்கு திரும்பிய பின்னர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல்லின் ஒரு அங்கமாக இருந்துள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...