ஒரு புகைப்படத்திற்காக 4 வருடங்களை செலவு செய்த கலைஞர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

வனஉயிரின புகைப்பட கலைஞரான கால்வின் லெய்ட்லா (48), ஒரு ஜோடி கிங்ஃபிஷர் குருவியை படம் எடுப்பதற்காக 4 வருடங்கள் காத்திருந்துள்ளார்.

ஆண் கிங்ஃபிஷர் குருவியானது பெண் குருவியிடம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக ஒரு வார காலம் எடுத்துக்கொள்ளும்.

லாவகமாக மீன் பிடித்து கொடுப்பது போன்றவற்றின் மூலம் அவளை வெற்றிகரமாக தன்னுடன் பொருத்திக்கொள்ளும்.

இதுகுறித்து ஸ்காட்லாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞரும், இசைக்கலைஞருமான கால்வின் லெய்ட்லா கூறுகையில், நான் பல வருடங்களாக அந்த பறவை தொடர்ந்து வருகின்ற ஒரு ஆற்றின் பக்கம் மறைந்திருந்து தான் என்னுடைய வீட்டுப்பாடத்தை முடித்தேன்.

இந்த மில்லியன் டொலர் காட்சியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு முறை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.

அந்த வாய்ப்பு மீண்டு இரண்டாவது முறையாக வந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அதிவிரைவில் நடந்து முடிந்தது.

ஏப்ரல் 11 காலை 7 மணிக்கு கால்வின் இந்த அழகான பறவைகளை சித்திரங்களாக படம்பிடித்தேன் என தெரிவித்துள்ளார்.

நான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஜோடியை பார்த்திருக்கிறேன். ஆனால் கடந்த மூன்று வாரங்களில் தான் இவை ஜோடியாக திரிந்தன. காலை 5 மணிக்கு எல்லாம் இந்த புகைப்படங்களை எடுக்க தயாராகிவிடுவேன்.

அவை மணிக்கு 25 மைல் வேகத்தில் பறக்கக்கூடியவை. இறைக்கு மேற்புறத்தில் 2 அடி உயரத்தில் இருந்து குறிவைக்க கூடியது. அதிவேகமாக செயல்பட கூடியவை.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் காத்திருப்பேன். ஆனால் எதையுமே பார்க்க முடியாது. எப்பொழுது இது நடக்கும் என்பதே எனக்கு தெரியாது.

அன்றைய தினம் நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. குறுகிய நேரத்தில் அதனை படம்பிடித்தேன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்