சண்டை போட்ட இளவரசர்கள்: சமாதானம் செய்வதற்காக மேகன் வீட்டிற்கு சென்ற கேட்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கர்ப்பிணி இளவரசி மேகனை சந்திப்பதற்காக, இளவரசி கேட் தன்னுடைய கணவர் வில்லியம் உடன் ஃபிரோமோர் இல்லத்திற்கு விருந்தினராக சென்றுள்ளார்.

கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மேகன் இன்னும் சில தினங்களில் தன்னுடைய முதல் குழந்தையினை பெற்றெடுக்க உள்ளார்.

அவர் தன்னுடைய குழந்தையினை ஆடம்பரமாக வளர்க்காமல், சாதாரண ஒரு சூழ்நிலையில் வளர்க்க வேண்டும் என்கிற காரணத்தினாலே, அரண்மனையை விட்டு வெளியேறியதாக ஒரு கூற்று இருந்து வருகிறது.

மற்றொரு புறம், ஹரி - மேகன் தம்பதியினருக்கும், வில்லியம் - கேட் தம்பதியினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் அரண்மனையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் தின கொண்டாட்டத்திற்காக அரண்மனையை சேர்ந்த அனைவரும் வின்ட்சர் கோட்டைக்கு வருகை தந்திருந்தனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் மேகன் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம் அந்த நிகழ்வின் போது இளவரசர் வில்லியமை விட்டு விலகியபடியே ஹரி நடந்துகொண்டார். கேட் உடன் நன்கு சிரித்து பேசிய ஹரியின் நடவடிக்கை வில்லியமிடம் மட்டும் சற்று விலகி காணப்பட்டது.

இதனை பார்த்த பொதுமக்கள், இளவரசர்களுக்குள் தான் சண்டை ஏற்பட்டிருக்கிறது என கூற ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இளவரசர்களுக்கிடையில் இருக்கும் பிளவுகளை குணப்படுத்த இளவரசி கேட் முயற்சி செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஈஸ்டர் தினம் முடிந்த அன்றைய மாலை நேரத்தில், வில்லியமை தன்னுடன் அழைத்துக்கொண்டு மேகன் தங்கியிருக்கும் ஃபிரோமோர் இல்லத்திற்கு சென்றிருக்கிறார் கேட்.

அங்கு மேகன் உடல்நிலை குறித்து விசாரித்த பின், தேநீர் அருந்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்