Brexitஐ நிறைவேற்றாத நீங்கள் எல்லோரும் துரோகிகள்: பிரபலத்தின் உரைக்கு குவியும் பாராட்டுகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கேள்வி நேரத்தின்போது உரையாற்றிய பிரபலம் ஒருவர், Brexitஐ நிறைவேற்றாத நீங்கள் எல்லோரும் துரோகிகள், என கடுமையாக விமர்சித்ததை பார்வையாளர்கள் கேலரியில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்.

ஹாலிவுட் நடிகரான John Rhys-Davies, பிரபல பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றின், கேள்வி நேரம் என்னும் நிகழ்ச்சியின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளுத்து வாங்கினார்.

Rhys-Davies என்ற அந்த நடிகர், பிரெக்சிட் குறித்த உரையின்போது, கிரீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Caroline Lucas, லேபர் கட்சியின் Jon Ashworth மற்றும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் Sir Vince Cable ஆகியோரை நேருக்கு நேராக பார்த்து, நீங்கள் பிரெக்சிட்டை நிறைவேற்றாவிட்டால் குடியரசை சேதப்படுத்தி விடுவீர்கள் என்றார்.

2016இல் வாக்கெடுப்பின்போது மக்கள் வாக்களித்த முடிவை நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் நிறைவேற்ற தவறியது வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட தன்னை அதிக கோபப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

தங்கள் முடிவுகளை எடுக்கக்கூடிய வயது வந்த மக்களிடம் தான் பேசும்போது, அவர்களிடம் அப்படி ஒரு கோபத்தைக் காண்பதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, John Rhys-Davies, இங்கிருக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு தங்களாலான நன்மையை செய்வதற்காகத்தான் அரசியலில் நுழைந்தீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் முதன்மை இலக்கு குடியரசைக் காப்பது, ஆனால், நீங்கள் குடியரசுக்கு துரோகம் செய்து விட்டீர்கள் என்று கூற, பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று அவர் கூறியதை ஆமோதித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers