லாட்டரியில் கோடிகளில் பரிசை வென்ற நபருக்கு சிறை தண்டனை: என்ன காரணம் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் £166,000 பரிசு விழுந்த நிலையிலும், அரசு சலுகைகளை அனுபவித்து வந்ததால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எரிக் புரோஸ் (62) என்ற நபருக்கு கடந்த 2015-ல் லாட்டரியில் £166,000 பரிசு விழுந்தது.

இதையடுத்து லாட்டரி பணத்தை வைத்து விலையுயர்ந்த கார் வாங்கிய எரிக், அந்த பணத்தில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி உலகத்துக்கு சுற்றுலா சென்றார்.

இந்நிலையில் கடந்த 2004-ல் இருந்து வீட்டு வசதி சலுகை, வேலைவாய்ப்பு சலுகை போன்றவற்றை எரிக் அனுபவித்து வந்தார்.

அவரிடம் அதிக சேமிப்பு இல்லை என்பதால் சலுகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் லாட்டரியில் பரிசு விழுந்த பின்னரும் அதை வெளியில் தெரிவிக்காமல் சலுகைகளை அனுபவித்து வந்ததாக எரிக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற வழக்கு போடப்பட்ட நிலையில் எரிக் £20,157.65 பணத்தை மோசடி செய்ததாக கூறப்பட்டது.

எரிக் நீதிமன்றத்தில் கூறுகையில், எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது உண்மை தான், ஆனால் அது என் குடும்பத்தின் பணம் என்பதால் அதை வெளியில் சொல்லவில்லை என கூறினார்.

இதை நீதிமன்றம் ஏற்காத நிலையில் எரிக்குக்கு 24 வாரங்கள் சிறை தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்