இலங்கைக்கு தேனிலவு செல்லமுடியவில்லையே.. பலமுறை அழுத பிரித்தானிய புதுப்பெண்

Report Print Raju Raju in பிரித்தானியா

இலங்கைக்கு தேனிலவு செல்ல தயார் நிலையில் இருந்த இரண்டு புதுமணதம்பதிகள் அதை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சூழலில் இதை நினைத்து தான் பலமுறை அழுததாக புதுப்பெண் கூறியுள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை இலங்கைக்கு செல்லவேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை சேர்ந்த இரு தம்பதிகள் இலங்கைக்கு தேனிலவு செல்ல நினைத்திருந்த நிலையில் அதை ரத்து செய்துள்ளனர்.

அபிகைல் என்ற இளைஞரும், அலிஸ்டர் என்ற இளம்பெண்ணும் ஜூன் மாதம் இலங்கைக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

இதற்காக தம்பதி £5,000 பணம் சேர்த்து வைத்திருந்தனர். இந்நிலையில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக தேனிலவு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இது குறித்து புதுப்பெண் அலிஸ்டர் கூறுகையில், இதை நினைத்து பலமுறை நான் அழுதுவிட்டேன், இலங்கைக்கு செல்ல முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இதற்கான பயண டிக்கெட்கள், விசா எல்லாம் கிடைத்துவிட்டது, அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்ட சூழலில் இப்படி ஆகிவிட்டது.

இதையடுத்து Borneo தீவு போன்ற இடங்களுக்கு தேனிலவு செல்கிறீர்களா என சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்.

ஆனால் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்றே நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால் எங்கள் பாதுகாப்புக்கு தான் இவ்வாறு கூறப்படுகிறது, அதை மனதில் எடுத்து கொள்ள தான் சிரமமாக உள்ளது என கூறியுள்ளார்.

இதே போல அயர்லாந்தை சேர்ந்த எமி குட்மேன் - ரோஸ் தம்பதியும் ஜூன் மாதம் இலங்கைக்கு தேனிலவு வர திட்டமிட்டிருந்தனர்.

அதுவும் கொழும்பில் உள்ள சின்னமன் கிராண்ட் ஹொட்டலில் தங்க நினைத்தனர்.

அந்த ஹொட்டலில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

குட்மேன் கூறுகையில், இன்னொரு தாக்குதல் நடத்தப்படலாம் என கூறப்படும் இடத்துக்கு போவது நிச்சயம் வசதியாக இருக்காது.

இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு செல்ல வேண்டும் என திட்டம் வைத்திருந்தோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்