4 பெட்டிகளில் கத்தை கத்தையாக பணத்துடன் லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் Stansted விமான நிலையத்தில் இருந்து 4 பெட்டிகளில் கத்தை கத்தையாக பணத்துடன் துபாய் செல்ல திட்டமிட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1.5 மில்லியன் பவுண்டுகள் பணத்தை அவரது தண்டனை காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பித் தருவதாக இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பணமோசடி விவகாரத்தில் செல்ம்ஸ்ஃபோர்டு கிரவுன் நீதிமன்றம் சதார் கான் என்ற 35 வயது நபருக்கு 3 ஆண்டுகளும் 9 மாதமும் சிறைதண்டனை விதித்தது.

Ilford பகுதியை சேர்ந்த கான், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் திகதி லண்டன் Stansted விமான நிலையத்தில் 4 பெட்டிகளுடன் சிக்கினார்.

குறித்த பெட்டிகளை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மொத்தம் 80 கிலோ கொண்ட அந்த 4 பெட்டிகளில் 10 மற்றும் 20 பவுண்டுகள் பணத்தாள்களுடன் கான் பிடிபட்டார்.

அந்த 4 பெட்டிகளுடன் அவர் துபாய் செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பணமோசடி தொடர்பில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையிலேயே அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, அவரது தண்டனைக் காலம் முடிவடைந்தாலும், அந்த பணத்தை அவரால் இனி மீட்க முடியாது என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்