18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நாட்டை விட்டு வெளியேறும்படி 18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதத்தைக் கண்டு அந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Magdi Ibrahim (43) மற்றும் அவரது மனைவி April (30), தங்கள் 18 மாதக் குழந்தையான Isaac பெயரில் வந்துள்ள கடிதம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்..

அந்த கடிதத்தில், நீங்கள் பிரித்தனியாவில் குடியேற விண்ணப்பித்திருந்தீர்கள், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினையால் பல இரவுகள் தாங்கள் தூக்கம் கூட வராமல் தவிப்பதாக தெரிவிக்கிறார்கள் Ibrahim தம்பதியினர்.

பெற்றோர் இருவருக்கும் சரியான விசா இருந்தும் ஏன் எங்கள் மகனுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது புரியவில்லை என்கிறார் Ibrahim.

சூடானைச் சேர்ந்த Ibrahim, பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு விசா பெற்று விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார்.

பிலிப்பைன்சைச் சேர்ந்தவரான அவரது மனைவி April, Ibrahimiன் 'dependent' என்ற முறையில் பிரித்தனியாவில் இருக்கிறார்.

என்றாலும் புலம்பெயர்தல் அலுவலர்கள் அந்த குழந்தை ஆறு மாத visitor விசாவில்தான் பிரித்தானியாவில் இருப்பதாகவும், ஜூலை மாத இறுதியில் அவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

நாங்கள் மிகுந்த அதிர்ச்சியிலிருக்கிறோம் என்று கூறும் Ibrahim, தங்களுக்கு உதவும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்.

ஒரு வேளை April இங்கிருப்பதற்கான ஆதாரம் வேண்டுமோ என்னவோ தெரியவில்லை, ஏன் இது நடந்தது என்ற எண்ணத்திலேயே இருக்கிறேன் என்கிறார் Ibrahim.

இதற்கிடையில் உள்துறை அலுவலக செய்தி தொடர்பாலர் ஒருவர், Issacஇன் பெற்றோர் தவறான விண்ணப்பப் படிவத்தை தங்கள் மகனுக்காக நிரப்பி அளித்திருக்கிறார்கள் என்றார்.

நாங்கள் Issacஇன் பெற்றோருக்கு தகவல் அனுப்பியிருக்கிறோம், அவர்கள் வந்து சரியான விண்ணப்பப் படிவத்தை நிரப்பித் தருமாறு கூறியிருக்கிறோம் என்கிறார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்