கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே தாக்குதலில் சிக்கிய பெண்: அடையாளம் காணமுடியாமல் திணறல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இலங்கை தாக்குதலில் சிக்கிய பிரித்தானிய பெண், கடைசி நேரம் வரை தன்னுடைய கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

வேலை விடயமாக இலங்கை வந்திருந்த, பிரித்தானியாவை சேர்ந்த லோரெய்ன் காம்ப்பெல் (55) என்கிற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சின்னமோன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.

அன்றைய தினம் 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் தற்போது வரை 359 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருப்பதோடு, 500க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய பலியான லோரெய்ன் காம்ப்பெல் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆனால் சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிஸார் ஆய்வு மேற்கொண்டதில், அவருக்கு அருகாமையில் தான் பயங்கரவாதி அமர்ந்திருந்துள்ளான்.

இதனை வைத்து அவரும் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், துபாயை சேர்ந்த நீல் எவன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதுகுறித்து நீல் எவன்ஸ் பேசுகையில், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு வரை என்னுடைய மனைவி எனக்கு செல்போனில் மெசேஜ் செய்துகொண்டிருந்தார்.

ஆனால் தாக்குதல் நடந்த அடுத்த நிமிடமே அவரிடம் இருந்து மெசேஜ் எதுவும் எனக்கு வரவில்லை எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்